இறந்ததாக நினைத்த முதியவருக்கு உயிர் கொடுத்ததா வேகத்தடை? மகாராஷ்டிராவில் வியக்க வைக்கும் சம்பவம்
ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்?
இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஓர் அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவை சேர்ந்த ஒரு முதியவர் மரணப் படுக்கையில் இருந்து 'திரும்பி வந்தார்' என்று அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து இந்த செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
இறந்துபோன முதியவர் மீண்டும் உயிர் பெற்று வந்தது பெரிய அதிசயம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது அதிசயமா அல்லது மருத்துவ அலட்சியமா என்பதுதான் கேள்வி.
அவர் எவ்வாறு உயிர் பிழைத்தார்? முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



