நைஜீரியா: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் ஸ்கேட் கால்பந்து விளையாட்டு

காணொளிக் குறிப்பு, நைஜீரியா: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் ஸ்கேட் கால்பந்து விளையாட்டு
நைஜீரியா: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் ஸ்கேட் கால்பந்து விளையாட்டு

ஸ்கேட் கால்பந்து என்பது பாரா-கால்பந்தின் ஒரு வடிவமாகும், மரத்தாலான ஸ்கேட்போர்டுகளைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது.

நைஜீரியாவின் கானோவைச் சேர்ந்த பாரா-கால்பந்து கோல்கீப்பர் அப்துல்வாசியு இப்ராஹிம், "இங்கு பலர் இருக்கிறோம், எங்கள் குடும்பங்கள் எங்களையே சார்ந்து உள்ளன. இந்த விளையாட்டின் மூலம், நிறைய மாற்றுத்திறனாளிகள் இப்போது தெருக்களில் பிச்சை எடுப்பதில்லை." என்று கூறுகிறார்.

நைஜீரியாவில் சுமார் 25 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகை மாற்றுத்திறனுடன் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கேட் கால்பந்து போன்ற விளையாட்டுகள் சமூக இணைப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஒரு வழியாக இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)