உலகெங்கும் 'வெள்ளைத் தங்கத்தை' வேட்டையாடும் சீனா - என்ன செய்கிறது? பிபிசி கள ஆய்வு
உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ள லித்தியத்தை தோண்டி வருகிறது சீனா.
அமெரிக்காவைச் சேர்ந்த சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, லித்தியம் மற்றும் கோபால்ட்டை சுத்திகரிப்பதில் சீனா நீண்ட காலமாக முன்னணியில் உள்ளது. 2022இல் உலக விநியோகத்தில் முறையே 72% மற்றும் 68% பங்குகளை அது கொண்டிருந்தது.
மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகின்ற முக்கியமான மூன்று தாதுக்களான கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்கக் கூடிய, சீன நிறுவனங்களின் பங்கு உள்ள குறைந்தது 62 சுரங்கத் திட்டங்களை உலகெங்கிலும் அடையாளம் கண்டுள்ளது பிபிசி குளோபல் சீனா யூனிட்.
கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்யவும், காற்றாலை விசையாழிகள் உற்பத்தித் திறனில் 60% அளவை எட்டவும், சோலார் பேனல் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் 80% அளவை எட்டவும், லித்தியம், மற்றும் பிற முக்கியமான கனிமங்களைச் செம்மைப்படுத்தும் அதன் திறன் உதவியது.
இந்தத் துறையில் சீனாவின் பங்கு இந்தப் பொருட்களை மலிவானதாகவும், உலகளவில் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது.
ஆனால் பசுமைப் பொருளாதாரத்திற்குத் தேவையான கனிமங்களைத் தோண்டி எடுப்பது மற்றும் பதப்படுத்துவது என்பது சீனாவுக்கானது மட்டுமல்ல. 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாக ஆக்க வேண்டுமென்றால், அவற்றின் பயன்பாடு 2040க்குள் ஆறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சீன விநியோகங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கியுள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன நிறுவனம் உலகின் பெரும்பாலான லித்தியம் இருப்புகளைக் கொண்ட அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலியின் "லித்தியம் முக்கோணத்தில்" லித்தியம் பிரித்தெடுக்கும் திட்டத்தில் முதல் பங்குகளை வாங்கியது.
உள்ளூர் சுரங்க நடவடிக்கைகளில் இன்னும் பல சீன முதலீடுகள் தொடர்ந்தன என்று சுரங்கத்துறை வெளியீடுகள், பெருநிறுவன, அரசு மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பங்குகளின் அடிப்படையில் பிபிசி அதைக் கணக்கிட்டபோது. சீன நிறுவனங்கள் தற்போது கனிமத்தை உற்பத்தி செய்யும் அல்லது கட்டுமானத்தில் உள்ள திட்டங்களில் 33% லித்தியத்தை கட்டுப்படுத்துகின்றன.
பிபிசி குளோபல் சீனா யூனிட் உலகெங்கிலும் சீன நிறுவனங்களின் பங்கு உள்ள குறைந்தது 62 சுரங்கத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. லித்தியம் அல்லது பசுமை தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான மூன்று தாதுக்களான கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்க அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தத் தொழில்கள் சீனாவின் உயர் முன்னுரிமைகளாக உள்ளன. உலகில் இந்தக் கனிமங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக இவற்றில் சில திட்டங்கள் உள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்யவும், காற்றாலை விசையாழிகள் உற்பத்தித் திறனில் 60% அளவை எட்டவும், சோலார் பேனல் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் 80% அளவை எட்டவும், லித்தியம், மற்றும் பிற முக்கியமான கனிமங்களைச் செம்மைப்படுத்தும் அதன் திறன் உதவியது.
இந்தத் துறையில் சீனாவின் பங்கு இந்தப் பொருட்களை மலிவானதாகவும், உலகளவில் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது.
ஆனால் பசுமைப் பொருளாதாரத்திற்குத் தேவையான கனிமங்களைத் தோண்டி எடுப்பது மற்றும் பதப்படுத்துவது என்பது சீனாவுக்கானது மட்டுமல்ல. 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாக ஆக்க வேண்டுமென்றால், அவற்றின் பயன்பாடு 2040க்குள் ஆறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சீன விநியோகங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கியுள்ளன.
சிசிசிஎம்சி எனப்படும் சீனாவின் சுரங்க வர்த்தக அமைப்பு, ஓராண்டுக்கு முன்பு சீனாவுக்குச் சொந்தமான சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புகார் தீர்ப்பு நடைமுறையை அமைக்கத் தொடங்கியது. உள்ளூர் சமூகங்கள் அல்லது சிவில் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்கான "கலாசார மற்றும் மொழியியல் திறன் இரண்டும் நிறுவனத்திடம் இல்லை" என்று செய்தித் தொடர்பாளர் லீலியா லி கூறுகிறார்.
இருப்பினும், இந்த நடைமுறை இன்னும் முழுமையாகச் செயல்பட ஆரம்பிக்கவில்லை.
இதற்கிடையில், வெளிநாட்டு சுரங்க நடவடிக்கைகளில் சீனாவின் ஈடுபாடு அதிகரிக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இது ஒரு முக்கிய சந்தையைக் கட்டுப்படுத்தும் "புவிசார் அரசியல் நடவடிக்கை" மட்டுமல்ல, வணிகக் கண்ணோட்டத்திலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஆம்பர் நிறுவனத்தின் ஆசிய திட்ட இயக்குநர் ஆதித்யா லோலா கூறுகிறார்.
"சீன நிறுவனங்களால் கையகப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன, ஏனெனில், அவர்களுக்கு இது லாபம்," என்று அவர் கூறுகிறார்.
இதன் விளைவாக சீனத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுரங்கத் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்படுவார்கள். மேலும் இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நல்ல பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன.
முழுமையான விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)