சௌதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சௌதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சௌதி அரேபியாவில் கடும் வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.
பாலைவன பூமியின் சௌதி அரேபியாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் ரியாத், காசிம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் வெள்ளம்.
இதனால் சௌதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல்வேறு பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
முழு விவரத்தை இந்தக் காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



