'அம்மா, ஊறுகாய் இருக்கிறதா?' - திருநங்கை தாயானது பற்றி கௌரி சாவந்த் நெகிழ்ச்சி

காணொளிக் குறிப்பு, கௌரி சாவந்த் திருநங்கை தாயானது எப்படி?
'அம்மா, ஊறுகாய் இருக்கிறதா?' - திருநங்கை தாயானது பற்றி கௌரி சாவந்த் நெகிழ்ச்சி

மும்பையைச் சேர்ந்த கௌரி சாவந்த், திருநங்கை என்ற தனது அடையாளம் தாயாக மாறியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்காக உதவும் அவர், 2001-ம் ஆண்டு உயிரிழந்த பாலியல் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகளை தத்தெடுத்ததன் மூலம் தாயாகியுள்ளார்.

"என்னை தன் மகளாக வளர்த்த என் திருநங்கை குருவிடம் நான் வளர்ந்தேன். என் சீடர்கள் என்னைத் தாயாக ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் குடும்பம் கலவையானது. அதன் ஒரு பகுதிதான் காயத்ரி. தாய்மையை பாலினத்துடன் தொடர்புபடுத்த கூடாது" என்கிறார் அவர்.

கௌரி சாவந்த் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் தாலி என்ற தொடரில் அவரது கதாபாத்திரத்தில் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌரி சாவந்த் திருநங்கை தாயானது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: