இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி - காணொளி

காணொளிக் குறிப்பு, இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி - காணொளி
இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி - காணொளி

இரானின் புதிய அதிபராக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலியை தோற்கடித்து அதிபராகி உள்ளார்.

எண்ணப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். ஜலிலி 44.3% வாக்குகளைப் பெற்றார்.

ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில், எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில், 40% என்ற அளவில் வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது.

இரானின் முந்தைய அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும் தகவல்களுக்குக் காணொளியைப் பார்க்கவும்.

இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)