இஸ்ரேலை அசைத்துப் பார்க்க ஹமாஸ் பயன்படுத்தும் ரகசிய சுரங்கங்கள் எப்படி இருக்கும்?
இஸ்ரேலால் ‘காஸா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது.
ஹமாஸை பூமியில் இருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதைச் செய்ய, முதலில் இந்த சுரங்கங்களை அழிக்க வேண்டும்.
போராளிகள் குழுக்களின் தங்குமிடமாகவும் அவர்கள் சென்றுவருவதற்கான பாதையாகவும் இந்த சுரங்கங்கள் உள்ளன. இதன் வழியாக அவர்கள் இஸ்ரேலை அடைய முடியும்.
பல்வேறு தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த எல்லை தாண்டிய பாதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்திய சுரங்கத்தை காண பிபிசியின் குவென்டின் சோமர்வில்லேவுக்கு 2015 இல் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரகசிய இடத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இந்த மோட்டார் குழி ஒரு சுரங்கத்தின் நுழைவாயிலாக இருக்கிறது.
ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இந்த பரந்த சுரங்க நெட்வொர்க்கில் எங்கோ ஒளித்துவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



