சூடானில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை

காணொளிக் குறிப்பு, சூடானில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை
சூடானில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை

உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூடானில் செல்போன் வெளிச்சத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கார்ட்டூமில் உள்ள மருத்துவமனைகளில் தண்ணீர் கூட இல்லாத அவலம் நிலவுகிறது.

போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், ஒருசில மருத்துவர்கள் மட்டுமே அங்கே தங்கியுள்ளனர்.

இதனால், மகப்பேறு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக் கூட போதிய மருத்துவர்கள் இல்லை. மருத்துவ வசதிகளும் கேள்விக்குறியாகவே உள்ளன.

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: