அமெரிக்கா: பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி, 9 பேர் காயம்
அமெரிக்கா: பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி, 9 பேர் காயம்
அமெரிக்காவின் ரோட் ஐலேண்டில் உள்ள ப்ரவுன் பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடும் பணி நடக்கிறது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில், தேர்வு நடைபெற்று கொண்டிருந்த வகுப்பறையில் துப்பாக்கி ஏந்திய நபர் தாக்குதல் நடத்தினார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றுவிட்டார். அமெரிக்காவின் மிகவும் பழமையான புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இடம் பெற்றுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை பயங்கர நிகழ்வு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



