இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் புதிய தகவல்

காணொளிக் குறிப்பு, 'இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' - டிரம்ப்
இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் புதிய தகவல்

இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூலை 01) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என நினைக்கிறேன். அது ஒரு வேறு விதமான ஒப்பந்தமாக இருக்கும். அந்த ஒப்பந்தம் வாயிலாக நாமும் இந்தியாவில் பொருள்களை விற்க முடியும். இப்போது, இந்தியா யாரையும் பொருள்களை விற்க அனுமதிப்பதில்லை. இந்தியா அதைச் செய்யும் என நினைக்கிறேன். அவர்கள் அப்படிச் செய்தால், மிகக் குறைந்த இறக்குமதி வரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்படலாம்." என தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு