கற்கள், கம்புகளுடன் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், பாலத்தீன மக்கள்

காணொளிக் குறிப்பு,
கற்கள், கம்புகளுடன் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், பாலத்தீன மக்கள்

இந்த சம்பவம் நடந்தது மேற்கு கரையில். மேற்கு கரையின் சயர் பகுதியில் ஒரு பக்கம் பாலத்தீன கிராமத்தினரும் மறுபக்கம் இஸ்ரேலிய குடியேறிகளும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்ளும் காட்சி இது.

கடந்த 1967ஆம் ஆண்டு போரின்போது ஜோர்டான் நாட்டிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் 27 லட்சம் பாலத்தீனர்களுக்கு மத்தியில் 7 லட்சம் இஸ்ரேலிய குடியேறிகள் வாழ்ந்து வருகின்றனர்.

காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்து மேற்கு கரையில் குடியேற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு