‘எங்கள் உயிருக்கு மதிப்பில்லை’ - இஸ்ரேல் தாக்குதலால் லெபனானை விட்டு வெளியேறும் பெண்கள்
இஸ்ரேல்- ஹெஸ்பொலா இடையேயான மோதலால், லெபனானில் இருந்து பலர் அச்சத்தால் வெளியேறுகின்றனர்.
“மக்கள் இறப்பதை தினமும் டிவியில் பார்க்கையில் உங்கள் உயிருக்கு மதிப்பில்லை என உணர்வீர்கள். என்னை மதிப்பற்றவளாக நான் உணர்கிறேன். வாழ்ந்தாலும் இல்லையென்றாலும் எங்கள் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.” என்று லெபனானிலிருந்து வெளியேறி இத்தாலிக்குச் சென்றுள்ள ரிஹாப் சயோர் கூறுகிறார்.
“எங்கள் பகுதி தற்போது வரை பாதுகாப்பானதாக உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. அத்தகைய மன அழுத்தம் மிகுந்த சூழலில்
வாழ விரும்பவில்லை. அதனால், சில காலம் தங்குவதற்காக இஸ்தான்புல் வந்தேன். லெபனானில் என்ன நடக்கிறது என பார்ப்பேன். நாடு திரும்ப முடியும் என நம்புகிறேன்” என்கிறார் லீனா டயப்.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



