ஹேமா கமிட்டி அறிக்கை: பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் அது குறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்
ஹேமா கமிட்டி அறிக்கை: பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியது என்ன?

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையால் கடந்த சில வாரங்களாக மலையாள திரைத்துறை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.

கேரளாவில், 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் புகழ்பெற்ற நடிகரின் உத்தரவின் பேரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையொட்டி எழுந்த சீற்றம் மற்றும் போராட்டங்களால் திரைத்துறையில் பெண்களின் பணிச்சூழல் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டியை அரசு அமைத்தது.

பெண்கள் வாய்ப்புக்காகப் பாலுறவுக்கு சமரசம் செய்ய வேண்டியிருப்பது, சில பலம் பொருந்திய ஆண்களின் மாஃபியா உலகம், பெண்கள் சினிமாவுக்காக பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருப்பது போன்ற மோசமான சூழல்களை இந்த அறிக்கை வெளிகொண்டு வந்தது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் அதுகுறித்து பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு பெண்களின் புகார்கள் குறித்து விசாரிக்க அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கேரளாவில் நடைபெற்ற இந்த நடவடிக்கை தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மேற்கு வங்க திரைத்துறையில் உள்ள பெண்களும் தங்களின் பணியிடம் குறித்துப் பேசுவதற்கு வழிவகை செய்துள்ளது.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)