செர்பியா நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய எம்.பி.க்கள் - எதற்காக?
செர்பியா நாடாளுமன்றத்தில் பாதுகாவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் களோபரத்தில் ஈடுபட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.
இதில், மூன்று எம்பிக்கள் காயமடைந்தனர். ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளார்.
பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கான வெளிப்படையான ஆதரவாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில் நிலைய மேற்கூரை ஒன்று இடிந்துவிழுந்ததைத் தொடர்ந்து, அங்கு ஊழலுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதேநேரம், செர்பியாவை சீர்குலைக்க மேற்கத்திய உளவுத்துறை போராட்டங்களைத் தூண்டி வருவதாக ஆளும் கூட்டணி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



