ராஜஸ்தானில் இடிந்து விழுந்த அரசுப் பள்ளி கட்டடம் - 7 குழந்தைகள் பலி
ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் அரசு பள்ளி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில், 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தததில் கிட்டத்தட்ட 35 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கியதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும் 28 குழந்தைகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக பி.டி.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது நடந்துள்ளது.
உள்ளூர் மக்கள் "பள்ளி கட்டடத்தின் மோசமான நிலை குறித்து தாசில்தாரிடம் முன்னரே கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை" என குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மோசமான நிலையில் இருக்கும் பள்ளி வளாகங்கள் குறித்து கல்வித் துறையிடம் கேட்கப்பட்டபோது அதில் இந்தப் பள்ளியின் பெயர் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



