காணொளி: விளை நெல்லை வழிபடும் ’புத்தரி’ அறுவடை திருவிழா

காணொளிக் குறிப்பு, விளை நெல்லை வழிபடும் ’புத்தரி’ அறுவடை திருவிழா
காணொளி: விளை நெல்லை வழிபடும் ’புத்தரி’ அறுவடை திருவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 5 பழங்குடி பிரிவைச் சேர்ந்த மக்கள் இணைந்து புத்தரி எனப்படும் நெல் அறுவடை திருவிழாவை கொண்டாடினர். புத்தூர் வயல் பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல் பயிரின் முதற்கதிரை தங்களின் பாரம்பரிய கலாச்சாரப்படி அறுவடை செய்தனர்.

பின்னர் நெல்லை மண்டபத்திற்கு தலையில் சுமந்து சென்றனர். பெண்கள் கலாச்சாரம் நடனம் ஆடியும், மேளதாளம் இசை முழங்கவும் நெல்லுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

சிறப்பு பூஜைக்காக மூன்று கோவில்களுக்குப் பிரித்து அனுப்பப்படும் இந்த நெல் பின்னர் விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு