காணொளி: 'கன்னடம் தெரியுமா?' - குடியரசுத் தலைவரை பார்த்து கேட்ட சித்தராமையா

காணொளிக் குறிப்பு, 'கன்னடம் தெரியுமா' சித்தராமையா கேள்விக்கு ஜனாதிபதி பதில்
காணொளி: 'கன்னடம் தெரியுமா?' - குடியரசுத் தலைவரை பார்த்து கேட்ட சித்தராமையா

மைசூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, அந்நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பார்த்து, " உங்களுக்கு கன்னடம் தெரியுமா?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த குடியரசுத் தலைவர், " இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கலாசாரம், பாரம்பரியம் உடையவை. அவை அனைத்தையும் மதிக்கிறேன். நமது கலாசாரமும் பாரம்பரியமும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவற்றை என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். எனக்கு கன்னடம் தெரியாது என்றாலும், அதை ஓரளவாவது கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு