விமானத்தில் பறக்கப்போகும் நீர் யானைகள் - காரணம் என்ன தெரியுமா?

காணொளிக் குறிப்பு, விமானத்தில் பறக்கப்போகும் நீர் யானைகள் - காரணம் என்ன தெரியுமா?
விமானத்தில் பறக்கப்போகும் நீர் யானைகள் - காரணம் என்ன தெரியுமா?
நீர் யானை, உலகம்

1993 ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் கடத்தும் மன்னனாக விளங்கிய பாம்ப்லோ எஸ்கோபார் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். முன்னதாக 1980களில் சட்டத்திற்கு விரோதமாக நீர் யானைகள் உட்பட பல வெளிநாட்டு விலங்குகளை அவர் கொலம்பியாவிற்கு கொண்டு வந்தார்.

அவரது மறைவிற்கு பிறகு, தனித்து விடப்பட்ட இந்த நீர் யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்று 70 ஆக இருக்கிறது. இந்த நீர் யானைகளை பராமரிப்பது கொலம்பிய அரசாங்கத்திற்கு பெரும் சிரமமாக மாறியுள்ளது. இந்த நீர் யானைகள் தற்போது அருகிலிருக்கும் கிராமப்புறங்களையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன.

எனவே தற்போது இந்த 70 நீர் யானைகளையும், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என கொலம்பிய அரசு முடிவெடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: