முதல்வர் ஸ்டாலினை கண்டித்த அன்புமணி ராமதாஸ்; என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
முதல்வர் ஸ்டாலினை கண்டித்த அன்புமணி ராமதாஸ்; என்ன நடந்தது?

அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை விடுவார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று பதில் அளித்தார்.

இது குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆணவத்துடன் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் பேசியதென்ன? முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)