சூடானில் புதைந்து கிடக்கும் தங்கம் சாபமாக மாறியது ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு, சூடானில் புதைந்து கிடக்கும் தங்கம் சாபமாக மாறியது ஏன்?
சூடானில் புதைந்து கிடக்கும் தங்கம் சாபமாக மாறியது ஏன்? - காணொளி

சூடானில் அதிகளவு தங்கம் எடுக்கப்படும் சுரங்கங்கள் பலவும் துணை ராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. சூடான் மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுவது, விற்பனை ஆகியவற்றில் ஆர்எஸ்எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது.

“பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் சூடானின் முக்கிய வருமான ஆதாரமாக தங்கச் சுரங்கங்கள் மாறியுள்ளன.” என்று பிபிசியிடம் கூறுகிறார் சூடான் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவரான ஷெவிட் வோல்டெமிக்கேல்

“ ஆர்.எஸ்.எஃப்-ன் வருமானத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் இங்கு மிக முக்கியமான விஷயம். ராணுவத்திற்கு இந்த விஷயத்தில் பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

மறுபுறம், அதிகளவு சுரங்கங்கள் காரணமாக, சுற்றியுள்ள பகுதிகளில் அழிவுகரமான விளைவுகள் நடைபெறுகின்றன. இங்கு சுரங்க மேற்கூரைகள் இடிந்து விழுந்து பலர் இறக்கின்றனர். மறுபுறம், பாதரசம் , ஆர்சனிக் உலோகங்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

விரிவான காணொளி

சூடான்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: