ரஷ்யா, இந்தியா நட்புறவில் சிக்கலா? புதின் பயணத்தில் எதிரொலிக்கப் போவது என்ன?

காணொளிக் குறிப்பு,
ரஷ்யா, இந்தியா நட்புறவில் சிக்கலா? புதின் பயணத்தில் எதிரொலிக்கப் போவது என்ன?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார். இந்தப் பயணத்திற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், ஏற்கெனவே ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா-இந்தியா உறவுகள் மேற்குலக நாடுகளில் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது' என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ள நிலையில், 'ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வது சுலபமில்லை' என்று சொல்லப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயை ஏற்கெனவே இந்தியா குறைத்துள்ளது.

இந்தச் சூழலில்தான் புதின் வருகை நிகழவுள்ளது. இது எத்தகைய தாக்கத்தை இரு நாட்டு உறவில் ஏற்படுத்தும்? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு