காணொளி: வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மறைவால் மீண்டும் வன்முறை - பின்னணி என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய போராட்டங்களில் முக்கிய இளைஞர் தலைவராக காணப்பட்ட ஷரீப் உஸ்மான் ஹாதி மறைவைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது.
ஷரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வரும் பிப்ரவரியில் நாட்டின் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியான ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தேர்தலில் ஷரீப் உஸ்மான் ஹாதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
வியாழக்கிழமை அவரது மரணம் குறித்த செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வங்கதேச தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்தில் போராடுவதற்காகத் திரண்டனர்.
பின்னர், போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான தி டெய்லி ஸ்டார், புரோதோம் ஆலோ ஆகியவற்றின் அலுவலகங்களை சேதப்படுத்தி, தீ வைத்தனர்.
இதன் முழு பின்னணி என்ன? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



