'காப்பாத்துங்க என குழந்தை கத்தியது தெம்பை கொடுத்தது' இலங்கை மண்சரிவில் குழந்தைகளை மீட்டவர்களின் அனுபவம்

காணொளிக் குறிப்பு, " காப்பாத்துங்க என குழந்தை கத்தியது தெம்பை கொடுத்தது" இலங்கை மண்சரிவில் குழந்தைகளை மீட்டவர்களின் அனுபவம்
'காப்பாத்துங்க என குழந்தை கத்தியது தெம்பை கொடுத்தது' இலங்கை மண்சரிவில் குழந்தைகளை மீட்டவர்களின் அனுபவம்

இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?

இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள்.

கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது.

நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மண்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டது எப்படி? சிக்கியவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்டது என்ன? இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு