காணொளி: வெள்ளை மாளிகையில் பைடன் படத்துக்கு பதில் பேனா படத்தை வைத்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு,
காணொளி: வெள்ளை மாளிகையில் பைடன் படத்துக்கு பதில் பேனா படத்தை வைத்த டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர்களின் புகைப்படத்தை காண்பிக்கும் 'பிரெசிடென்ஷியல் வாக் ஆஃப் பேம்' ஓவல் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டது.

இதில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனின் புகைப்படத்துக்கு பதிலாக தானியங்கி பேனா கையெழுத்திடும் புகைப்படத்தை வெள்ளை மாளிகை வைத்துள்ளது.

முக்கிய ஆவணங்களில் பைடன் ஆட்டோ பென் என்ற தானியங்கி பேனாவை பயன்படுத்துவதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இதை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் பிபிசிக்கு கிடைக்கவில்லை.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு