மக்கள் மத்தியில் பிரபலமாகும் குதிரைப் பால் ஐஸ்க்ரீம் - புதிய ஆய்வில் கிடைத்த தகவல்

காணொளிக் குறிப்பு, குதிரைப் பாலில் இருந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது
மக்கள் மத்தியில் பிரபலமாகும் குதிரைப் பால் ஐஸ்க்ரீம் - புதிய ஆய்வில் கிடைத்த தகவல்

குதிரைப் பாலில் இருந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம் என போலந்து நாட்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

லண்டனின் கிட்டி டிராவர்ஸ் அதை சோதித்துப் பார்த்துள்ளார். தென்கிழக்கு லண்டனை சேர்ந்த இவர், ஐஸ்க்ரீம் தயாரித்து லண்டனில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகிறார்.

குதிரைப் பாலுடன், காட்டுப்பூ தேன், பெருஞ்சீரக மகரந்தகம், விதைகள், பேரிக்காய் தோல் போன்றவற்றை சுவையூட்டிகளாகச் சேர்த்து ஒரு புதிய வகை ஐஸ்க்ரீமை அவர் தயாரித்துள்ளார். இதை மக்கள் விரும்புவார்கள் என அவர் நம்புகிறார்.

“இந்த ஐஸ்க்ரீமை சுவை பார்த்து, சொல்லப்போவது எனது மகன். அவனுக்கு நான்கு வயதுதான் ஆகிறது. ஆனால், அவனது நாக்கில் மிகச் சிறந்த சுவையரும்புகள் உள்ளன. எனவே அவன் என்ன சொல்கிறான் என்பதைப் பொறுத்துதான் எல்லாம்” என்கிறார் கிட்டி டிராவர்ஸ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)