நேபாள நகர வீதியில் சாதுவாக வலம் வரும் காண்டாமிருகம் - செல்பி எடுத்து மகிழும் மக்கள்
நெபாளத்தின் தெற்கு பகுதியான சௌராஹா என்ற நகரத்தில், எந்தத் தயக்கமும் இல்லாமல், மக்களை அச்சுறுத்தாமல் இந்த காண்டாமிருகம் சுற்றித் திரிகிறது.
சொல்லப்போனால், இப்போது இந்த காண்டாமிருகம் அந்த பகுதியில் மிகவும் பிரபலம். அதைப் பற்றிய வீடியோக்களும் ரீல்ஸ்களும் உலகம் முழுவதும் வைரலாகி உள்ளன. இதன் பெயர் மெஹோலி.
700க்கும் மேற்பட்ட காண்டா மிருகங்கள் இருக்கும் சித்வான் தேசிய பூங்காதான் மெஹோலியின் உண்மையான வசிப்பிடம்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மெஹோலி தனது தாயிடமிருந்து பிரிய நேர்ந்தது. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இதனை மீட்டு, பராமரித்து வந்தது. அப்போதிலிருந்து மெஹோலியை காட்டில் விடுவிக்க பலமுறை முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், மெஹோலியோ மீண்டும் இங்கே திரும்பி வந்துவிடுகிறது.
இந்த காண்டாமிருகக் குட்டிகளும் மெஹோலியைப் போல்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகளின் தாக்குதலுக்கு உள்ள அவை, தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அழைத்துவரப்பட்டன.
லால் பகதூர் மகதாரா என்பவர் இவற்றைப் பார்த்து கொள்கிறார். காலை முதல் மாலை வரை முழுக்க அவைகளுடன் இருக்கிறார்.
மனிதர்களிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற அக்கறையும் நேசமும், மனிதர்களுடன் ஒரு நெருக்கமான பிணைப்பை அவற்றுக்கு உருவாக்குகிறது.
மக்கள் தங்களை பார்க்க வரும்போதெல்லாம், அவை வருகின்றன. உள்ளூர் மக்களுடன் அவை ஒன்றி பழகுகின்றன. அவர்கள் அவற்றை தொட்டு பார்க்கின்றனர். இந்த காண்டாமிருகம் கேமராவுக்கு போஸ் கொடுப்பது போல் உள்ளது. சில நேரங்களில் வேலியை தாண்டி தெருவுக்கே அவை வந்துவிடுவதாக மக்கள் கூறினர்.
காண்டாமிருகங்கள் சுற்றுலா பயணிகளை கவர்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தேசிய பூங்கா மற்றும் பராமரிப்பு அதிகாரிகள் சில சவால்களையும் எதிர்கொள்கின்றனர்.
தேசிய இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த ஒரு மூத்த வன உயிர் ஆர்வலர் அணில் பிரசாய் இதுவரை 20 காண்டாமிருகங்களை கடந்த 15 ஆண்டுகளில் மீட்டுள்ளார். அவற்றில் கிட்டத்தட்ட பாதி சிகிச்சையின்போது இறந்துவிட்டன.
இந்த இரண்டு குட்டிகளும் சித்வன் தேசிய பூங்காவில் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை வளர்ந்து வந்தன ஆனால் அவை மீண்டும் மீண்டும் மக்களின் விவசாய நிலங்களுக்கு திரும்பி வந்துகொண்டே இருந்தன.
அவை கிழக்கு நேபாளில் உள்ள வேறு ஒரு பாதுகாப்பட்ட இடத்துக்கு மாற்றப்பட்ட வேண்டும்.
அங்கேயும் புஷ்பா மற்றும் அஞ்சலி எனும் இரண்டு பெண் குட்டிகளும் இரவானால் அவர்களை கவனித்துக்கொள்வர்களிடம் வந்துவிடுகின்றன.
காண்டாமிருகங்கள் மக்களுடன் பழகத்தொடங்கும் போது, சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கக்கூடும். இது மெஹோலி விஷயத்திலும் காணப்படுகிறது.
சில சமயங்களில் பாதுகாப்பு தளத்திலிருந்து வெளியேறி, விவசாய நிலங்களில் உள்ள பயிர்களைச் சாப்பிடத் தொடங்குகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மிக கோவமாக உள்ளனர்.
ஷர்மிலா தராய் போன்ற விவசாயிகள் மிகவும் விரக்தியுடனும், கவலையுடனும் உள்ளனர்.
காட்டுக் காண்டாமிருகங்களும் இது போல சில சமயங்களில் தேசிய பூங்காவை விட்டு வெளியேறுகின்றன. இது மனிதர்களுடன் மோதலுக்குக் காரணமாகின்றது. இது காயத்திற்கும், சில சமயங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கின்றது.
ஆனால் மெஹோலி விஷயம் வேறு மாதிரி. அது இந்த நகர்ப்பகுதிகளை தனது வீடு போல ஆக்கிக்கொண்டது. கிட்டத்தட்ட எல்லாரும் இதை ஏற்றுக்கொண்டனர். மேலும் பல காண்டாமிருக குட்டிகள் வன உயிரின ஆர்வலர்களால் வளர்க்கப்படும் நிலையில், இந்த மெஹோலி போல வரும்காலத்தில் மேலும் நிறைய மெஹோலிகள் உருவாகிவிட்டால் என்ன செய்வது என்பதே கேள்வி.
முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



