மகாராஷ்டிரா: ஆக்கிரமிப்பு பற்றி செய்தி சேகரித்த பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
மகாராஷ்டிரா: ஆக்கிரமிப்பு பற்றி செய்தி சேகரித்த பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு பெண் செய்தியாளர் தாக்கப்படும் இந்த காணொளி அண்மையில் வெளியானது. மன்சார் மார்க்கெட் கமிட்டி பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் ஆக்கிரமிப்பு குறித்து உள்ளூர் சேனலுக்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சினேகா பார்வே என்ற செய்தியாளர் தாக்கப்பட்டார்.

மன்சார் மார்க்கெட்டில் நடந்த ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரிக்கும் போது பாண்டுரங் மோர்டே தன்னைத் தாக்கியதாக சினேகா குற்றம் சாட்டுகிறார்.

காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி (எஃப்.ஐ.ஆர்), சினேகா பார்வே சமர்த் பாரத் என்ற உள்ளூர் யூடியூப் சேனலுக்காக செய்தி சேகரித்துள்ளார். அவரும் அவரது குழுவும் மன்சார் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் சட்டவிரோத கட்டுமான நடவடிக்கைகள் குறித்த செய்தியை பதிவு செய்து கொண்டிருந்தனர்.

கேமரா முன் அவர் செய்தி அளித்துக்கொண்டிருந்தபோது, 8 முதல் 10 பேர் கொண்ட குழு பின்னால் இருந்து மரக்கம்பால் அவரைத் தாக்கத் தொடங்கியது என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினேகா தலையில் அடிபட்டு விழுந்தததும் பாண்டுரங் மோர்டே அவரது பின்புறம் தொடர்ந்து அடித்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. தலையிட முயன்ற மற்றவர்களை அச்சுறுத்தியதாகவும், தலையிட்டால் அவர்களும் தாக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டதாகவும் எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக விளக்குகிறது இந்தக் காணொளி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு