கீழடி ஆய்வறிக்கையில் என்ன பிரச்னை? - அமர்நாத் ராமகிருஷ்ணா பிபிசி தமிழுக்கு பேட்டி
கீழடி ஆய்வறிக்கையில் என்ன பிரச்னை? - அமர்நாத் ராமகிருஷ்ணா பிபிசி தமிழுக்கு பேட்டி
கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, தான் அளித்த ஆய்வறிக்கையை மாற்றப் போவதில்லை என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.
மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது.
தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 - 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



