பிரான்ஸ் அதிபரை முகத்தில் கை வைத்து தள்ளிய மனைவி

காணொளிக் குறிப்பு,
பிரான்ஸ் அதிபரை முகத்தில் கை வைத்து தள்ளிய மனைவி

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கை அவர் மனைவி முகத்தில் கை வைத்து தள்ளிய தருணம் இது.

இமானுவேல் மக்ரோங் அதிர்ச்சி அடைவது போல தெரிந்தாலும், பின் சிரித்தவாறு கேமராவை நோக்கி கையசைத்தார்.

இது அதிபரும் அவர் மனைவியும் குறும்புத்தனமாக இருந்த தருணம் என அதிபர் இல்ல வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுவொரு வேடிக்கையான, விளையாட்டான செயல் என்றும் அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் விளக்கமளித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு