தீபாவளி இனிப்புகளில் கலப்படம் இருந்தால் வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? (காணொளி)

காணொளிக் குறிப்பு,
தீபாவளி இனிப்புகளில் கலப்படம் இருந்தால் வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? (காணொளி)

தீபாவளி நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து டைனிங் டேபிள் வரை இனிப்புப் பெட்டிகள் பரவியிருக்கும்.

ஆனால், இந்த இனிப்புகளுடன் சேர்த்து இப்போது இனிப்புகளில் கலப்படம் இருப்பதாக செய்திகளும் வருகின்றன.

தினமும் ஏராளமான கலப்பட பால், நெய் மற்றும் பால்கோவா போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

பண்டிகை நாட்களில் இனிப்புகளுக்கு அதிக தேவை இருப்பதே இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக தேவையை பூர்த்தி செய்ய இந்த உணவுப் பொருட்களில் செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் அடிக்கடி சேர்க்கப்படுகின்றன.

இந்த கலப்பட பொருட்கள் நிச்சயமாக மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆனால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (FSSAI) சில எளிய சோதனைகளை பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கலப்படங்களை கண்டறிய முடியும். அது எப்படி?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)