ஆப்கானிஸ்தான்: தாலிபன் அடக்குமுறையை பாடல்கள் மூலம் எதிர்க்கும் 'புர்கா' சகோதரிகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் பெண்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதித்தனர். பெண்கள் பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெண்கள் போராடினார்கள், ஆனால் அவர்களது போராட்டம் ஒடுக்கப்பட்டது.
மேலும் இசை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. இசையைக் கேட்பதும் பாடுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
2021 முதல் இசையில் எந்தப் பின்னணியும் இல்லாவிட்டாலும் கூட, தங்களுடைய அடையாளத்தை மறைக்க புர்கா அணிந்துகொண்டு, தாலிபன்களின் அடக்குமுறைக்கு எதிராக பாடல்கள் இயற்றி பாடுகிறார்கள் இந்த சகோதரிகள்.
"தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஒரு கவிதை கூட எழுதியதில்லை. ஆனால் இப்போது எங்கள் எதிர்ப்பை காட்ட இதைச் செய்கிறோம்" என்கிறார்கள்.
இவர்களது காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு அதற்கு வரவேற்பும் மிரட்டல்களும் சேர்ந்தே வருகின்றன.
"எங்கள் கைகளில் கிடைத்தால் உங்கள் நாக்கை அறுத்துவிடுவோம் என மிரட்டல்கள் வருகின்றன. ஆனாலும் இதை நாங்கள் தொடர்வோம். எங்கள் குரல்கள் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். இது எங்கள் எதிர்ப்பின் தொடக்கம் தான்" என்கின்றனர் இந்த சகோதரிகள்.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், LAST TORCH
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



