ஐஸ்கிரீமிலும் ஆரோக்கியம் - சிறுதானிய ஐஸ்கிரீம் செய்து அசத்தும் கோவை இளைஞர் – வீடியோ

காணொளிக் குறிப்பு, சிறுதானிய ஐஸ்கிரீம் செய்யும் கோவை இளைஞர் – வீடியோ
ஐஸ்கிரீமிலும் ஆரோக்கியம் - சிறுதானிய ஐஸ்கிரீம் செய்து அசத்தும் கோவை இளைஞர் – வீடியோ

பொதுவாகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எதோ ஒரு வகையில் கெடுதல் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.

ஆனால், கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஐஸ்கிரீமையே ஆரோக்கியமானதாக மாற்றி வருகிறார்.

பிரவீன் உணவு தயாரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் பட்டம் பெற்றவர்.

சுயதொழில் செய்ய விரும்பி பேக்கரி தொழிலைத் துவங்கினார். ஆனால் வழக்கமான பேக்கரிகளைப் போலல்லாமல், சிறுதானியங்களால் பிஸ்கட் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவந்தார்.

சிறுதானியங்களை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசித்தபோது, அவற்றிலிருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் யோசனை வந்ததாகச் சொல்கிறார்.

அதை எப்படிச் செய்கிறார்?

தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

தயாரிப்பு – மதன் பிரசாத்

சிறுதானிய ஐஸ்கிரீம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: