You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா வண்ணமயமான கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா இன்று (ஜன. 26) கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதை (கடமைப் பாதை) பகுதியில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பூட்டிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவும் கடமைப்பாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோதி வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்ததும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கடமைப் பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனையடுத்து, போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் அரசு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)