காணொளி: தன்னிடமே ஒருவர் அத்துமீறியது பற்றி பெண் அதிபர் கூறியது என்ன?
காணொளி: தன்னிடமே ஒருவர் அத்துமீறியது பற்றி பெண் அதிபர் கூறியது என்ன?
தன்னிடம் அத்துமீறியவர் மீது வழக்கு தொடரப் போவதாக மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறினார்.
“நான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இது ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட ஒன்று என்பதால் மட்டுமல்ல, நம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் எதிர்கொள்ளும் ஒன்று என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளேன்.”
“மெக்ஸிகோ குடியரசின் அனைத்து மாகாணங்களிலும் இது ஒரு கிரிமினல் குற்றச் செயல் அல்ல. ஆனால், இது மெக்ஸிக்கோவில் குற்றம்தான். இதை நானே புகாரளிக்காமல் இருந்தால், அனைத்து மெக்ஸிகோ பெண்களும் என்ன நிலையில் இருப்பார்கள் என நினைத்து பாருங்கள். ஒரு அதிபருக்கே இப்படி நடக்கிறது என்றால் நாட்டில் உள்ள மற்ற பெண்களுக்கு என்ன நடக்கும்?” என அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



