பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

காணொளிக் குறிப்பு, பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?

ஒரு நகரமே அழிந்து கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிபாடுகள். வீதிகளில் சேறும் சகதியும் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன.

அங்குள்ள மக்களின் முகங்களில் கவலை தோய்ந்துள்ளது. பேரழிவுக்குத் தள்ளப்பட்ட லிபியாவில் அழுகுரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட சுனாமியை போன்ற பயங்கர வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடலில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தப் பெரும் வெள்ளத்தால் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: