ஸ்கேட்டிங் ஷூக்களுடன் கர்பா நடனம் -அசத்தும் சிறுமிகள்
நவராத்திரி விழாவின் போது குஜராத்தில் பாரம்பரிய நடனமான கர்பா ஆடுவது வழக்கம். இந்த நடனம் குழுவாக பலர் சேர்ந்து ஆடுவதாகும். இந்த நடனத்தை சூரத்தில் சிறுமிகள் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து ஆடி அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ஸ்கேட்டிங் ஷூ அணிந்து நடப்பது கூட பலருக்கு கடினமாக இருக்கையில், இந்த சிறுமிகள் லாவகமாக கர்பா நடனம் ஆடுகின்றனர். ஆறு மாத கால பயிற்சி பெற்ற சிறுமிகள் இந்த நடனத்தை பல்வேறு இடங்களில் ஆடியுள்ளனர்.
ஸ்கேட்டிங் கர்பா ஆடுவதற்கு தரை உகந்ததாக இருக்க வேண்டும். தான் பல ஆண்டுகளாக ஸ்கேட்டிங் கர்பா சொல்லி தருவதாகவும் தன்னிடம் பயிலும் மாணவிகள் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளதாக கூறுகிறார் பயிற்றுநர் மீனா மோதி.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



