பாலேன் ஷா : அகண்ட நேபாளம் கேட்டவருக்கு அரசியல் முக்கியத்துவமா?

காணொளிக் குறிப்பு, நேபாளத்தின் 35 வயது பாலேன் ஷா : யார் இவர்?
பாலேன் ஷா : அகண்ட நேபாளம் கேட்டவருக்கு அரசியல் முக்கியத்துவமா?

நேபாளத்தின் 35 வயது பாலேன் ஷா, இளம் வயதில் அரசியலில் நுழைந்தவர். பிரபல ரேப்பராக இருந்த அவர், 2022-ம் ஆண்டு, எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், காட்மாண்டுவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேயர் பதவியில் தினசரி நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இளைஞர்களை நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்.

அவரது செயல்களும் பேச்சுகளும் பல சர்ச்சைகளையும் கிளப்பியிருந்தது. அகண்ட நேபாளம்- அதாவது இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வரைபடத்தை அவர் பயன்படுத்தியது இந்தியாவிலும் பேசுபொருளானது.

நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இளைஞர்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு அடுத்து வரும் நாட்களில் நேபாள அரசியலில் முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு