காணொளி: கதகளி மூலம் வரலாற்றில் இடம்பெற்ற இஸ்லாமிய மாணவி

காணொளிக் குறிப்பு, கிருஷ்ணர் வேடமிட்டு கதகளி அரங்கேற்றம் செய்த இஸ்லாமிய மாணவி
காணொளி: கதகளி மூலம் வரலாற்றில் இடம்பெற்ற இஸ்லாமிய மாணவி

கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலையான கதகளியை கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்துள்ள முதல் இஸ்லாமியச் சிறுமியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் சப்ரி.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள 95 ஆண்டு பழமையான கலா மண்டலத்தில் அக்டோபர் 2-ஆம் தேதியன்று விஜயதசமி நாளில் நடந்த கதகளி அரங்கேற்றத்தில் கிருஷ்ண வேஷத்தில் பங்கேற்றார்.

''இன்று என் கனவு நனவாகியிருக்கிறது. அரங்கேற்றத்தின்போது எனக்கு எவ்வித அச்சமும் ஏற்படவில்லை. மாறாக நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன். அதை என்னால் விவரிக்க இயலாது. ஆனால் இன்னும் நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. கதகளி கலையில் ஒரு முக்கியக் கலைஞராக உருவெடுக்க வேண்டும். அதற்காக நான் இன்னும் நிறைய கற்கவும் தயாராயிருக்கிறேன்!'' என சப்ரி தெரிவித்துள்ளார்.

இவருக்கு கதகளி மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு