காணொளி: டேல் ஸ்டெய்ன் பாணியில் அதிவேகமாக பந்துவீசி அசத்தும் 8 வயது சிறுமி

காணொளிக் குறிப்பு,
காணொளி: டேல் ஸ்டெய்ன் பாணியில் அதிவேகமாக பந்துவீசி அசத்தும் 8 வயது சிறுமி

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னை போலவே அதிவேகமாகப் பந்து வீசும் இந்த எட்டு வயது சிறுமி, பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்.

ஐனா வாசிருடைய பந்துவீச்சு பாணியை சமூக ஊடகங்களில் மக்கள் பாராட்டுகிறார்கள்.

அவரது வீடியோ வைரலானதை தொடர்ந்து, பெஷாவர் ஜல்மி கிரிக்கெட் அணி, ஐனா வசிர் தங்களது மகளிர் லீக்கில் பங்கெடுப்பார் என்று அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு