காணொளி: பஞ்சாபில் பயணிகள் ரயிலில் தீ விபத்து- என்ன நடந்தது?
காணொளி: பஞ்சாபில் பயணிகள் ரயிலில் தீ விபத்து- என்ன நடந்தது?
பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து பிகாரின் சஹர்சா நோக்கிச் சென்ற கரிப் ரத் ரயில் சனிக்கிழமை காலை சர்ஹந்த் ரயில் நிலையம் அருகே தீப்பற்றியது. நல்வாய்ப்பாக இதில், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
ரயில் பெட்டியிலிருந்து புகை வெளியேறியதாகவும், பின்னர் தீப்பரவியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பயணிகளை ரயில்வே காவலர்கள் பத்திரமாக மீட்டனர். ஒரு பெட்டியில் பற்றிய தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவியதாக சர்ஹந்த் ரயில்வே அதிகாரி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



