'ஆங்கிலம் ஓர் ஆயுதம்' - ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசியது என்ன?
உத்தர பிரதேசம் ரேபரேலியில் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் கற்பதன் முக்கியத்துவம் பற்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசினார்.
"ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடாது என பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ்-ஐ சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். மோகன் பகவத் நாம் ஆங்கிலம் பேசக்கூடாது எனக் கூறுகிறார். ஆனால் ஆங்கிலம் என்பது ஓர் ஆயுதம்.
அதைக் கற்றுக்கொண்டால் நீங்கள் தமிழ்நாடு, மும்பை, ஜப்பான் என எங்கே வேண்டுமானாலும் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பணியாற்றலாம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பழங்குடிகள், தலித்துகள் மற்றும் ஏழைகள் ஆங்கிலம் கற்று முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆங்கிலம்தான் உங்களுடைய மிகப்பெரிய ஆயுதம். ஹிந்தியும் முக்கியம்தான். உங்களது வேரை துண்டித்துக்கொள்வது சரியல்ல. ஆனால், ஆங்கிலமும் மிக அவசியம்" என்று குறிப்பிட்டார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



