பேருந்துக்குள் கொட்டிய கற்கள்: 19 பேர் பலியான கோர விபத்து

காணொளிக் குறிப்பு, லாரி - அரசுப்பேருந்து மோதி விபத்து
பேருந்துக்குள் கொட்டிய கற்கள்: 19 பேர் பலியான கோர விபத்து

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.

ரங்காரெட்டி மாவட்டம் கானாபூர் கேட்டில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பேருந்து மீது மோதியதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் 19 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டிப்பர் லாரியில் இருந்த பெரும்பாலான கற்கள், பேருந்திற்குள் விழுந்ததால், அதன் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி கடினமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜேசிபி உதவியுடன் டிப்பரை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்ததில், ஒரு போலீஸ் அதிகாரி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. விபத்துக்குள்ளான பேருந்தில் 72 பேர் இருந்தனர் என்று நடத்துநர் கூறியதாக தெலுங்கானா ஏடிஜிபி மகேஷ் பகவத் தெரிவித்தார். பேருந்தானது, தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு