காணொளி: வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்த கார்

காணொளிக் குறிப்பு, கட்டுப்பாட்டை இழந்த கார்
காணொளி: வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்த கார்

மகாராஷ்டிராவில் வேகத்தடையைக் கவனிக்கத் தவறியதால் தடுப்புச் சுவரில் மோதி கார் ஒன்று தீப்பிடித்தது.

நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் சென்ற கார் ஒன்று, கரமத் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த சம்பவம் நடந்தது.

காரில் இருந்த ஐந்து பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு நடந்தது. இந்த இடத்தில் நடக்கும் மூன்றாவது விபத்து இது என்பதால் இப்பகுதியில் இருக்கும் வேகத்தடைகள் பற்றி கவலைகள் எழுந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு