காணொளி: கல்லறையில் இடத்தை முன்பதிவு செய்த நபர்

காணொளிக் குறிப்பு, கல்லறையில் இடத்தை முன்பதிவு செய்த நபர்
காணொளி: கல்லறையில் இடத்தை முன்பதிவு செய்த நபர்

ஆந்திராவில் கடப்பா பகுதியில் உள்ள கல்லறையில் தனக்கான இடத்தை ஒருவர் முன்பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் கல்லறைக்கு அருகில் தனது கல்லறை இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர், ரூ.10 ஆயிரம் செலுத்தி அந்த இடத்தை தனக்கென முன்பதிவு செய்துள்ளார். அந்த இடத்தில் கொட்டகை அமைத்துள்ளார். தனது மனைவிக்கு விருப்பமான வகையில் அங்கு செடிகளும் வளர்த்து வருகிறார்.

அந்த கல்லறையில் இது வரை 26 பேர் இது வரை இது போன்று தங்கள் இடங்களை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் பராமரிப்பு மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக முன்பதிவுகளை தொடர்வது சவாலாக இருப்பதாக கல்லறையை நிர்வகிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு