உயரம் குறைவு, சிறுநீர்ப்பை இல்லை: வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மாடலாக சாதிக்கும் பெண்

காணொளிக் குறிப்பு, சிறுநீர்ப்பை இல்லாமல் வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மாற்றுத்திறனாளியாக சாதிக்கும் பெண்
உயரம் குறைவு, சிறுநீர்ப்பை இல்லை: வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மாடலாக சாதிக்கும் பெண்

அபோலிக்கு பிறக்கும்போதே சிறுநீர்ப்பை இல்லை. இது அவருடைய ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல், உடல் வளர்ச்சியையும் பாதித்தது. இதனால், சராசரி உயரத்தைவிட அவர் குறைவாகவே இருப்பார்.

சிறுவயதிலிருந்தே இதனால் அவருக்கு பல சவால்கள் ஏற்பட்டன, குறிப்பாக கல்வி கற்பதில் சவால்களை சந்தித்தார்.

உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், எட்டாம் வகுப்பு முடித்ததும் பள்ளியிலிருந்து வெளியேறும் நிலை அபோலிக்கு ஏற்பட்டது. ஆனால், எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய உறுதி குலைந்து போகவில்லை. வீட்டிலிருந்தே கல்வி கற்று, வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.

இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான 'இந்தியன் ஐடல்' ( Indian idol) நிகழ்ச்சியில் அபோலி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக பல லட்சக்கணக்கானோரை அவர் கவர்ந்தார். சமூக ஊடகங்களிலும் அவர் பிரபலமானார்.

மாடலிங் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான பேரார்வம்.

அவருடைய உடல்நிலை காரணமாக, டயாலிசிஸ் செய்வதும் ஏற்புடையதாக இல்லை. தன்னுடைய உடல் ரீதியான சவால்களைக் கடந்தும், நம்பிக்கை மற்றும் பலம் வாய்ந்தவராக உள்ளார் அபோலி. உறுதியுடன் ஒவ்வொரு கடினமான தருணங்களையும் எதிர்கொள்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)