சேலை கட்டி உடற்பயிற்சி - 15,000 பெண்கள் ஊர்வலமாக சென்றது எதனால்?

காணொளிக் குறிப்பு, சேலை கட்டி உடற்பயிற்சி - 15,000 பெண்கள் ஊர்வலமாக சென்றது எதனால்?
சேலை கட்டி உடற்பயிற்சி - 15,000 பெண்கள் ஊர்வலமாக சென்றது எதனால்?

எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி தான் இது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த இந்த பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் சேலை அணிந்து நடந்து சென்றது தனித்துவமான ஒன்றாக அமைந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சேலைகளை கட்டி வந்த பலர் குழுக்களாக் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு நிறங்கள், பல்வேறு டிசைன்களில் சேலை கட்டி பெண்கள் பேரணியாக வந்ததை டிரோன் காட்சிகளாக பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தியது. 3 கிலோமீட்டர் தூரம் நடந்த இந்த சேலை பேரணியில் 80 வயது முதியவர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவாக குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனத்தை அனைவரும் சேர்ந்து ஆடினர்.

சூரத் மாநகராட்சியும், ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, பெண்களிடையே உடற்பயிற்சி குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்டது என்று சூரத் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

சூரத் நகரம், ஜவுளி, வைர தொழில்களின் மையமாக அறியப்படுகிறது. அதனால் இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், இந்த ஊர் மினி இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்றது, நிகழ்ச்சியை வண்ணமயமாக்கியது. இந்த பேரணியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டு சேலையுடன் பேரணியாக வந்தனர்.

தயாரிப்பு: பார்த் பாண்டியா

உடற்பயிற்சி

பட மூலாதாரம், தர்மேஷ் அமின்/ நிலேஷ் பவ்சார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: