காணொளி: நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர். ரகுமான்

காணொளிக் குறிப்பு, நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்த ஏ.ஆர். ரகுமான்
காணொளி: நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர். ரகுமான்

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்க, பிரபல திரைப்பட இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்திறங்கினார்.

நாகூர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா நவம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகையில் நேற்றிரவு தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (டிசம்பர் 1) அதிகாலை நாகூர் தர்காவை அடைந்தது. அதன்பின் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு, பாரம்பரிய முறைப்படியிலான 'சந்தனம் பூசும் வைபவம்' நடைபெற்றது.

இந்த சந்தனம் பூசும் வைபவத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு