இந்தியாவில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்
இந்தியாவில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 27 வயதான ரசியா முராடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி படித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய சிறந்த செயல்திறனுக்காக பல்கலைக்கழகத்தில் இவர் தங்கப்பதக்கம் பெற்றது, தலைப்பு செய்தியாகியிருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்ததற்காக அவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

ரசியா இந்தியா வந்தபோது, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்யவில்லை. அப்போது அங்கு பெண்கள் பள்ளிக்குச் செல்லவும் உயர்கல்வி பயிலவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கல்வி பயிலவும், வேலைக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனக்கூறும் ரசியா, ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் மற்றும் ஆப்கன் பெண்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும் என்றார்.

ரசியா, ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், RAZIA MURADI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: