காணொளி: ரஷ்ய எண்ணெய் கப்பல்களை தாக்கிய யுக்ரேன்

காணொளிக் குறிப்பு, ரஷ்ய எண்ணெய் கப்பல்களை தாக்கிய யுக்ரேன்
காணொளி: ரஷ்ய எண்ணெய் கப்பல்களை தாக்கிய யுக்ரேன்

கருங்கடலில் ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் உள்நாட்டு தயாரிப்பான 'சீ பேபி' (Sea Baby) எனப்படும் கடல் ட்ரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக யுக்ரேன் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்துள்ளது.

கய்ரோஸ் (Kairos) மற்றும் விராட் (Virat)எனப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களும் ரஷ்யாவின் ஷேடோ ஃப்ளீட் (Shadow Fleet) எனப்படும் கப்பல் தொகுப்பை சேர்ந்தது என, யுக்ரேன் பாதுகாப்பு சேவைகளின் அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதல் எப்போது நடந்தது என அவர் தெரிவிக்கவில்லை.

ரஷ்யா இந்த கப்பல்கள் மூலம் அதிகளவிலான எண்ணெயை ஏற்றுமதி செய்து தங்களுக்கு எதிரான போருக்கு பண உதவியை பெறுவதாக கூறும் யுக்ரேன் இந்த கப்பல்கள் மீது கடுமையான சர்வதேச நடவடிக்கை வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு