சிரியாவில் கட்டடத்தை தாக்கிய இஸ்ரேல் - நேரலையில் பதிவான காட்சி
சிரியாவில் கட்டடத்தை தாக்கிய இஸ்ரேல் - நேரலையில் பதிவான காட்சி
இஸ்ரேலின் வான் தாக்குதல், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகத்தை தாக்கியது. செய்தியாளர் நேரலையில் இருக்கும்போது இரண்டாம் தாக்குதல் நிகழ்ந்தது.
டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதாக சிரியா சுகாதார அமைச்சகம் கூறுகிறது. தென் மேற்கு சிரியாவில் உள்ள சுவேய்தா பகுதியில் சமீப நாட்களில் தொடர்ச்சியான மோதலை தொடர்ந்து இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
அந்த பகுதியில் உள்ள மத சிறுபான்மையின ட்ரூஸ் மக்களை பாதுகாக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. சுவைடா பகுதியில் சமீபத்திய ட்ரூஸ் பிரிவினர் மற்றும் பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



